சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க இன்று(31) மாத்திரமே அதிகாரிகளுக்கு அவகாசம் இருப்பதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் தலையீடு செய்யாவிட்டால் நாளையதினம் (01) காலை 6.30 முதல் 72 தொழிற்சங்கங்களை சேர்ந்த சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார ஊழியர்கள் சங்கங்கள் இதற்கு முன்னரும் எதிர்ப்பில் ஈடுபட்ட போதிலும் அரசாங்கத்தினால் அதற்கான பதில் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இது சுகாதாரத் துறையில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.