Thursday, May 15, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 வயது சிறுமியை வன்புணர்ந்த பெரியப்பாவுக்கு 50 வருட கடூழிய சிறைத்தண்டனை

10 வயது சிறுமியை வன்புணர்ந்த பெரியப்பாவுக்கு 50 வருட கடூழிய சிறைத்தண்டனை

தனது தம்பியின் 10 வயது மகளை மூன்று சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்த மூத்த சகோதரருக்கு (பெரியப்பா) 50 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கண்டி மேல் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி தர்ஷிகா விமலசிறி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

3 சந்தர்ப்பங்களில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக இந்த நபர் மூன்று குற்றச்சாட்டுகளைப் பெற்றிருந்ததுடன், மேலும் அவர் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படிஇ,முதல் குற்றச்சாட்டிற்கு 20 வருடங்களும், இரண்டாவது குற்றச்சாட்டிற்கு 20 வருடங்களும், மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 10 வருடங்களுமாக ஐம்பது வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும், நட்டஈட்டை செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் தனித்தனியாக பதினைந்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, தண்டப்பணத்தை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை விதித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles