Friday, November 15, 2024
24 C
Colombo
வடக்குதடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி மீன்பிடித்த ஐவர் கைது

தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி மீன்பிடித்த ஐவர் கைது

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கடற்கரையில் தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய இழுவை படகையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் எருக்கலம்பிட்டி மற்றும் உப்புக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

விடத்தல் தீவு மக்கள் மற்றும் கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்களால் நேற்று (29) இரவு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் விடத்தல் தீவு இறங்கு துறையில் இழுவை படகு நிறுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக நடவடிக்கைக்காக 5 மீனவர்களும் வலைகளும் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மேலதிக நடவடிக்கைக்காக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles