யால மற்றும் புன்தல வனப் பூங்காக்களில் சுற்றுலா சேவை ஜீப் கட்டணம்
2000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என யால சபாரி ஜீப் சங்கத்தின் தலைவர் அஜித் பிரியந்த நேற்று (29) தெரிவித்தார்.
அதன்படி, டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் மிட்சுபிஷி கார்களில் 4 மணி நேர பயணத்திற்கான கட்டணம் 13,000 முதல் 15,000 ரூபா வரையும் ஒரு நாளைக்கு 28,000 முதல் 30,000 ரூபா வரை பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகேந்திரா மேக்சி மற்றும் டாடா வாகனங்களில் 4 மணி நேர பயணத்திற்கான கட்டணம் 11,000ல் இருந்து 13,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு நாள் பயணத்திற்கான கட்டணம் 26,000 ரூபாவில் இருந்து 28,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யால சபாரி ஜீப் சங்கத்தில் சுமார் 475 ஜீப்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பால் ஜீப் உரிமையாளர்கள் வியாபாரத்தை விட்டு வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்தார்.