Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு18 சதம் நிலுவையை செலுத்தாததால் துண்டிக்கப்பட்ட மின்சாரம்

18 சதம் நிலுவையை செலுத்தாததால் துண்டிக்கப்பட்ட மின்சாரம்

காலி – கல்வடுகொடையில் உள்ள வீடொன்றில், மின்கட்டணத்தில் செலுத்த வேண்டிய 18 சதம் நிலுவைத் தொகையை செலுத்தாததால், மின்சாரத்தை துண்டிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

மின்கட்டணம் செலுத்தும் போது 18 சதம் பற்றாக்குறை இருந்ததாகவும், 18 சதத்துக்காக மின்சாரம் துண்டிக்க மாட்டோம் என லெகோ நிறுவனம் கூறியதாகவும், எனினும் அவர்கள் வீட்டுக்கு வந்து மின்சாரத்தை துண்டித்துள்ளதாக குறித்த வீட்டில் வசிப்போர் தெரிவித்தனர்.

வீட்டின் உரிமையாளர் மேலும் குறிப்பிடுகையில், தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த மருந்துகள் உள்ளிட்ட பல பொருட்கள் நாசமாகியுள்ளதாக லெகோ நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்துஇ இது தொடர்பான நஷ்டஈட்டை அவர்கள் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles