Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் உற்பத்தியாகும் முதுமையைத் தடுக்கும் மருந்து

இலங்கையில் உற்பத்தியாகும் முதுமையைத் தடுக்கும் மருந்து

முதுமையைத் தடுக்கும் இயற்கை மருந்தின் உற்பத்தி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், அதனை விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி பேராசிரியர் சமீர ஆர்.சமரகோன் தெரிவித்தார்.

இம்மருந்து இயற்கை மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுவதாகவும், முதுமையைத் தடுப்பது அல்லது இளமையாக தோற்றமளிப்பதே மருந்தின் செயல்பாடு என்றும் அவர் கூறினார்.

இந்த மருந்தின் உற்பத்தி மற்றும் சோதனைக்கு தனக்கும் தனது குழுவினருக்கும் 4 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக் கொண்டதாகவும், தற்போது மருந்து உற்பத்தியில் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேவையான ஒப்புதல்கள் போன்றவை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles