Friday, November 15, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீனவர்கள் 10 பேர் இன்று விடுதலை

இந்திய மீனவர்கள் 10 பேர் இன்று விடுதலை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர்.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 9 மாதங்கள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் அவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட படகினை அரச உடமையாக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மீனவர்களிடையே கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசி உள்ளிட்ட வேறு உடமைகளை மீள வழங்குமாறு நீதிவான் பொன்னுத்துரை கிருசாந்தன் உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட 10 மீனவர்களையும் மிரிஹான முகாமிற்கு அனுப்பி, இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

இவர்கள் ஜனவரி 14ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதேவேளை படகின் உரிமையாளரான முதலாவது சந்தேகநபருக்கு நீதித் துறையின் ஊடாக அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிடப்பட்டது. படகு உரிமையாளருக்கான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles