Saturday, February 14, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாய்லாந்து பிரதமர் இலங்கை வருகிறார்

தாய்லாந்து பிரதமர் இலங்கை வருகிறார்

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று நாட்டுக்கு வருகைதரவுள்ள அவர், இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருடன் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடும் நிகழ்விலும் அவர் பங்குபற்றவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles