Tuesday, January 20, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாவனெல்லையில் 30 கடைகள் தீக்கிரை

மாவனெல்லையில் 30 கடைகள் தீக்கிரை

மாவனெல்ல பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக தற்காலிகமாக கட்டப்பட்ட சில கடைகளில் நேற்று (28) தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 30 கடைகள் எரிந்து நாசமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார், தீயணைப்பு படையினர் மற்றும் அப்பகுதி மக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles