கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பரீட்சையை நடத்துவதற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த பரீட்சையின் இரண்டாவது பரீட்சை தாள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 முதல் 03 மணி வரை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு முன்னதாகவே குறித்த வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து மூன்று மொழிகளிலும் குறித்த வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் கடந்த 10 ஆம் திகதி சமூக வலைத்தளங்களில் வெளியானமை குறிப்பிடத்தக்கது.