நிகவெரட்டிய திகன்னேவ பகுதியில் யானையொன்று மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
நிகவெரட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்குற்பட்ட திவுல்லேவ திகன்னேவ பகுதியில் நேற்று அதிகாலை காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதிவலுக் கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரம் எனவும் 30 வயது கொண்டது எனவும் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதன்போது காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நிகவெரட்டிய நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த யானை, நிகவெரட்டிய மிருக சிகிச்சைப் பிரிவின் வைத்தியரினால் நாளை பிரேத பரிசோதனைக்கு உற்படுத்த உள்ளதாக நிகவெரட்டிய வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.