Friday, September 20, 2024
31 C
Colombo
வடக்குகருத்துச் சுதந்திரம் கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

கருத்துச் சுதந்திரம் கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை அரசின் திட்டமிட்ட ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து நேற்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ஊடக மையம் மற்றும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இருந்து பேரணியாக சென்று யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நீக்கு ஊடக சுதந்திரத்தை அடக்காதே மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்காதே போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், யாழ் ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார், உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் துமிந்த சம்பத், காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித்...

Keep exploring...

Related Articles