சனத் நிஷாந்தவின் சாரதி விபத்து இடம்பெற்ற தினத்தன்று மதியம் தனது வட்ஸ்அப் கணக்கில் பதிவிட்ட இடுகை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதியான பிரபாத் எரங்க, தனது வட்ஸ்அப் கணக்கில் இவ்வாறு ஒரு குறிப்பை பதிவிட்டிருந்தார்.
‘நாளைக்குள், என் பெயரின் கீழ் ஒரு அழகான புகைப்படம் விழும், அது என் பெயருக்கு மேலே அமா மஹா நிர்வாண சுவ(ஆன்மா சாந்தியடையட்டும்) என்று எழுதப்பட்டிருந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்பதை எனக்கு அனுப்புங்கள். வாசிக்க ஆர்வமாக உள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.