இலங்கை வந்த நெதர்லாந்து பெண் ஒருவரின் உடலைத் தொட்டு முகத்தில் முத்தமிட முயன்றதாகக் கூறப்படும் சுற்றுலா வழிகாட்டி ஒருவரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெட்ரோனெல்லா அக்னிதா மரியா என்ற 42 வயதுடைய நெதர்லாந்து பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் குறித்த பெண்ணுடன் நட்பைப் பேணி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண், வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாகவும்,நேற்று முன்தினம் (24) இரவு மது அருந்திவிட்டு வந்த சந்தேகநபர் அறையில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.