செய்திகள்உள்நாட்டுபெலியத்த துப்பாக்கிச்சூடு: மேலும் இருவர் கைது

பெலியத்த துப்பாக்கிச்சூடு: மேலும் இருவர் கைது

பெலியத்தவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில், கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு சந்தேகநபரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் காலி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி பிரதேசத்தில் வசிக்கும் 25 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது, ​​அவர்களிடம் இருந்து 09 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின், மோட்டார் சைக்கிள், 03 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கூரான கத்தி என்பன காணப்பட்டன.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles