Thursday, July 31, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 பிள்ளைகளையும் வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு யாத்திரை சென்ற தம்பதி கைது

3 பிள்ளைகளையும் வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு யாத்திரை சென்ற தம்பதி கைது

குளியாப்பிட்டி – தீகல்ல பிரதேசத்தில் தமது மூன்று பிள்ளைகளையும் மூடிய அறைகளுக்குள் பூட்டிவைத்துவிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை சென்ற தம்பதியினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளும் 8, 5 மற்றும் 3 வயதுடையவர்கள் எனவும் பொலிஸ் அவசர சேவை 119 ஊடாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் அவர்களை பொலிஸார் பொறுப்பேற்றதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த வீட்டின் கதவை உடைத்து பிள்ளைகளை மீட்டதுடன்இ காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளுக்கும் பிஸ்கட், பாண் போன்றவற்றை உணவாக வைத்துவிட்டு, பெற்றோர்கள் புனித யாத்திரை சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (24) வீடு திரும்பிய பெற்றோரை குளியாப்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles