‘விஷ்வ புத்தா’ என்ற நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (24) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் கொழும்பு மேலதிக நீதவான் சிறைச்சாலை திணைக்களத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விஷ்வ புத்தா கைது செய்யப்பட்டு கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.