பெலியத்த பிரதேசத்தில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் தவிர, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பெலியத்த அதிவேக நுழைவாயிலுக்கு அருகில், நேற்று முன்தினம்(22) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐவர் உயிரிழந்தனர்.