Sunday, May 25, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச மருத்துவர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

அரச மருத்துவர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

நாளை (24) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 35,000 கொடுப்பனவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கையொப்பமிட்ட அறிவிப்பு இன்று (23) வெளியிடப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான நிதியை திறைசேரி வழங்கவில்லை என குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படும் வரை இந்தக் கொடுப்பனவை தற்காலிகமாக நிறுத்துவதற்கு திறைசேரி தீர்மானித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles