பொரளை – சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் 15 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு வகையான துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்கள் சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் மலசலகூடத்திற்கு அருகில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
T56 துப்பாக்கிகள் மற்றும் M16 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 330/ E 1/04 சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கொழும்பு மாநகர சபை ஊழியர்களுடன் இணைந்து அந்த வளாகத்திற்கு சொந்தமான கழிவறையை சுத்தம் செய்யும் போது இந்த தோட்டாக்களை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சில காலங்களுக்கு முன்னர் யாரேனும் குறித்த தோட்டாக்களை புதைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.