கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், டிசெம்பரில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
2023 நவம்பரில் 2.8% ஆக இருந்த நிலையில், 2023 டிசெம்பரில் 4.2% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், 2023 டிசெம்பரில் இருந்து உணவுப் பணவீக்கம் 1.6% ஆக அதிகரித்துள்ளது.
2023 நவம்பரில் 7.1% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் 2023 டிசம்பரில் 6.3% ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.