Saturday, March 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர் தர மாணவர்களுக்கு பாடசாலையில் தொழிற் பயிற்சி

உயர் தர மாணவர்களுக்கு பாடசாலையில் தொழிற் பயிற்சி

தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி அறிவுடன் கூடிய தொழிற்கல்வி தொடர்பான நடைமுறை பயிற்சி மற்றும் கோட்பாட்டு ஒத்திகையுடன் கூடிய வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உயர்தரக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களை தொழிற்கல்விக்கு வழிநடத்தும் நோக்கில் இந்தத் தொழிற்பயிற்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 299 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஜனவரியில் அபோசா உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் 09.02.2024 க்கு முன்னர் இத்திட்டத்தில் பதிவு செய்ய முடியும் எனவும் இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles