Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7 கோடி ரூபா மின் கட்டணத்தை செலுத்தாத பாராளுமன்றம்

7 கோடி ரூபா மின் கட்டணத்தை செலுத்தாத பாராளுமன்றம்

பாராளுமன்றம், மின்சார சபைக்கு 07 கோடி ரூபாவுக்கும் அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இன்று (22) இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையின் மறுசீரமைப்பு, மின்சாரச் சட்டம் மற்றும் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மின்சார ஊழியர்கள் குழுவை இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வங்கிகள், துறைமுகங்கள், தபால், புகையிரத, தொலைத்தொடர்பு, ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கையேடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles