2030ல் இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பை விட புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
புற்று நோயாளர் சிகிச்சை சேவைகளை அதிகரிக்கும் நோக்கில் மாத்தறை கம்புருகமுவ புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் 80 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ‘அபேக்ஷா பியச’ புற்று நோயாளர் சிகிச்சை பிரிவு நோயாளர் பராமரிப்பு சேவைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புற்று நோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு, சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதுடன் நோய்த்தடுப்புத் துறையை வலுப்படுத்துவதும் மிகவும் முக்கியமானது என சுகாதார செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
நோய்த்தடுப்புத் துறையில் குறிப்பாக நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பு நடவடிக்கை, உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியில் மாற்றங்கள் போன்ற பல திட்டங்கள் இருக்க வேண்டும் என்றும், அதற்காக தற்போதைய திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் பேராசிரியர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போதைய இறப்புகளில் பெரும்பாலான இறப்புகள் இதய நோய்களால் ஏற்படுவதாகவும், 2030 ஆம் ஆண்டில் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் இதய நோய்களை விட அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.