பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள குழு உறுப்பினருமான குடு சலிந்துவின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விசேட தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணையில், குடு சலிந்து, பல்வேறு நபர்களின் பெயர்களில் 48 வங்கிக் கணக்குகளை பராமரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
அந்த கணக்குகளில் 3 ஆண்டுகளில் 106 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுமை தெரியவந்துள்ளது.
குடு சலிந்து 79 சொகுசு வாகனங்களை வைத்திருப்பதாகவும், அவற்றின் இலக்கத் தகடுகளை மாற்றி போதைப்பொருள் கடத்தியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.