நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட ‘யுக்திய’ நடவடிக்கை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, 65 கிலோ கிராம் ஹெரோயின், 136 கிராம் ஐஸ் மற்றும் 254 போதை மாத்திரைகள் கடந்த 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.