இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அண்மையில் சிவனொளிபாத மலைக்கு சென்றுள்ளார்.
இலங்கையர்களுடனான அன்பான சந்திப்புகள், தொலைதூரத்தில் இருந்து பயணிக்கும் இளைஞர்கள் முதல் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்பன பயணத்தின் சிறந்த பகுதி என அவர் கூறினார்.
தேநீர் அருந்தும் போது இடம்பெற்ற உரையாடல்களும், அவர்கள் வழங்கிய அறிவுரைகளும் இலங்கையர்கள் மீதான தனது மரியாதையை அதிகரித்துள்ளதாக அவர் தனது உத்தியோகபூர்வ X தள கணக்கில் பதிவிட்டுள்ளார்.