Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபழுகாமத்தில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு

பழுகாமத்தில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பழுகாமம் மற்றும் பட்டாபுர மக்களுக்கு வட்ஸ் எனும் அமைப்பின் அனுசரனையோடு பழுகாம் பொசாட் எனும் அமைப்பினால் நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசத்தின் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், மட்டக்களப்பு வட்ஸ் அமைப்பினர், பழுகாமம் பொசாட் அமைப்பினர், மற்றும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிப்புற்ற பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்

வட்ஸ் அமைப்பின் பிரித்தானியா கிளை தலைவர் அழகரெத்தினம் கங்காதரனிடம் பழுகாமம் பொசாட் அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக இந்நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளளதாக அதன் ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் காலத்தின் தேவையறிந்து தமக்கு இந்நிவாரணங்களைத் வழங்கி வைத்த அமைப்புக்களுக்கு தாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக கலந்த கொண்டு பொதுமக்கள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles