Wednesday, November 12, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாரம்மல துப்பாக்கிச் சூடு: உப பொலிஸ் பரிசோதகர் கைது

நாரம்மல துப்பாக்கிச் சூடு: உப பொலிஸ் பரிசோதகர் கைது

நாரம்மல – தம்பலஸ்ஸ பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு நாரம்மல பகுதிக்கு சென்றுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் பின்னர் பொறுப்பான தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles