Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோக்குவரத்து விதிமீறலில் சிக்கினால் அபராத கட்டண ரசீது வீட்டுக்கு

போக்குவரத்து விதிமீறலில் சிக்கினால் அபராத கட்டண ரசீது வீட்டுக்கு

கொழும்பு நகர எல்லைக்குள் பொருத்தப்பட்டுள்ள ஊஊவுஏ கமரா அமைப்புகளின் ஊடாக சாரதிகளுக்கு தண்டப்பணம் வழங்கும் முறை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் கண்காணித்து போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிவதை விட இந்த முறை 300 மடங்கு திறன் வாய்ந்தது என அவர் தெரிவித்தார்.

ஒரு மாகாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஒருவர் போக்குவரத்து விதிமீறலில் சிக்கினால், பொலிஸாரால் வழங்கப்படும் ரசீது அவரது வீட்டிற்கு அனுப்பப்படும் எனவும், அபராதம் செலுத்திய பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்தை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles