ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், காலநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் (John Kerry) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்ற ஜனாதிபதி, டாவோஸ் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டுள்ளார்.