லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லிட்ரோ எரிவாயு டெர்மினல் லங்கா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் முழு பங்கு அல்லது பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அரசாங்கம் Litro Gas Lanka Limited இல் 99.936% பங்குகளையும் Litro Gas Terminal Lanka (Pvt) Company இல் 100% பங்குகளையும் கொண்டுள்ளது.
ஏலங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பெப்ரவரி 16 ஆம் திகதி பிற்பகல் 02.00 மணி வரை வழங்கப்பட்டுள்ளதடுன், தேர்வு செய்யப்பட்ட ஏலதாரர்களுக்கான ஏலம் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறும் என்றும் அரசாங்கத்தின் நிறுவன மறுசீரமைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏல மதிப்பீடு மற்றும் வெற்றிகரமான ஏலதாரரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை ஜூன மாத நடுப்பகுதியில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.