ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றுமொரு புத்தம் புதிய யு-330 -243 எயார்பஸ் ரக விமானத்தை குத்தகை அடிப்படையில் பெற்று கொண்டுள்ளது.
குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
பிரான்சில் தயாரிக்கப்பட்ட குறித்த புதிய விமானம் நேற்று (16) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.