ஆராச்சிக்கட்டுவ – புருத்தகெலே பிரதேசத்தில் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த 04 கசிப்பு உற்பத்திசாலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பெருந்தொகை கொடாவுடன் நால்வர் நேற்று (16) கைது செய்யப்பட்டதாக சிலாபம் ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஆராச்சிக்கட்டுவ மற்றும் புருத்தகெலே பிரதேசத்தை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இடத்தில் கையிருப்பில் உள்ள கொடாவை பயன்படுத்தி 6000 லீற்றருக்கும் அதிகமான கசிப்பு உற்பத்தி செய்ய முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேக நபர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.