பலாங்கொடை ராசகலை பிரதேசத்தில் சிறுத்தை தாக்கி இளைஞன் ஒருவன் பாரிய காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் முகப் பகுதியில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.
பலாங்கொடை ராசகலை பொல்கேல்ல பிரதேசத்தில் வைக்கப்பட்ட பொரியியல் சிக்கிய
சிறுத்தையை பார்க்கச் சென்ற ஒரு குழுவினர் மீது சிறுத்தை தாக்கியதில் குறித்த இளைஞனின் முகப் பகுதியில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுத்தை பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றதால் பலாங்கொடை ராசகலை மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்கின்றனர்.