Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்ஆடைகளை திருடிய நியூசிலாந்து எம்.பி இராஜினாமா

ஆடைகளை திருடிய நியூசிலாந்து எம்.பி இராஜினாமா

வர்த்தக நோக்கத்திற்காக ஆடைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலக முடிவு செய்துள்ளார்.

நியூசிலாந்தின் மத்திய-இடது பசுமைக் கட்சியின் உறுப்பினர் கோல்ரீஸ் கஹ்ராமன், ஆடைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இராஜினாமா செய்தார்.

நியூசிலாந்துக்கு அகதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.பி., கோல்ரிஸ் ஆவார்.

43 வயதான அவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடுபவராவார். ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகளுக்காக வாதிட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

ஓக்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர சில்லறை விற்பனையாளரிடமிருந்து ஆடைகள் திருடப்பட்டது தொடர்பான பொலிஸாரின் விசாரணைக்குப் பிறகு, பதவி விலக கோல்ரிஸின் முடிவு செய்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டபோது ஆடைகளைத் திருடியதை கோல்ரீஸ் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தவறு என்று தெரிந்தும், அந்த மன அழுத்த சூழ்நிலையை போக்கவே அவ்வாறு செய்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles