கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐவரடங்கிய விசாரணைக் குழுவொன்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இந்த ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை நீதியமைச்சர் நியமித்துள்ளார்.
குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாப்பா நியமிக்கப்பட்டுள்ளதுடன், உரிய விசாரணை மற்றும் பரிந்துரை அடங்கிய அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட விசாரணை குழுவுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம் மற்றும் பொலிஸ்) எம்.எஸ்.பி.சூரியப்பெரும, நீதித்துறை சிறைச்சாலை மற்றும் அரசாங்க சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எஸ்.ஹப்புகஸ்வத்த, நீதிமன்ற சிறைச்சாலை மற்றும் அரசாங்க சட்டவாக்க மறுசீரமைப்பு செயலாளர் (சட்டம்), டி.எம்.சமன் திஸாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் யானா ஆகியோர் நீதிமன்ற அமைச்சரினால் நியமிக்கப்பட்ட பரீட்சார்த்த சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.