Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்வணிகம்30 வகையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

30 வகையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் 30 வகையான மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு 4 அரச நிறுவனங்களுக்கு மாத்திரம் விண்ணப்பிக்க விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனங்களின் இறக்குமதியை பாதிக்கும் ஏனைய அனைத்து விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் வழங்குவார் என்றும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

11.01.2024 அன்று வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி இலக்கம் 2366/19, கல்வி அமைச்சுக்கு இரண்டு பேருந்துகள், சுகாதார அமைச்சுக்கு மூன்று நடமாடும் மகப்பேறு பிரிவு வாகனங்கள் மற்றும் 21 இரட்டை வண்டி வாகனங்கள், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு ஒரு S.U.V வாகனம் ஒன்று ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு மூன்று எகானமி கிளாஸ் ராம்ப் கார்கள் இறக்குமதி செய்ய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

11.12.2023 அன்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த மகஜர் ஒன்றிற்கு அமைச்சர்கள் சபை வழங்கிய தீர்மானத்தின் பிரகாரம் இந்த விதிமுறைகள் வெளியிடப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles