சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த செ.திருச்செல்வம் தனது 60 ஆவது வயதில் இரண்டாவது உலக சாதனையை நிகழ்த்தி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது சாதனையை நிலைநிறுத்தியுள்ளார்.
நேற்று காலை சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் மேற்படி உலக சாதனை நிகழவு ஆரம்பித்திருந்தது.
இதன்போது 1550 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை 19 நிமிடம் 45 செக்கன்களில் 1500 மீற்றர் தூரம் தனது தலைமுடியை மாத்திரம் பயன்படுத்தி இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் கடந்த வருடம் தனது முகத் தாடியின் உதவியோடு 1500கிலோ எடை கொண்ட வாகனத்தை 7 நிமிடங்களில் 400மீற்றர் தூரம் இழுத்து உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.