சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (16) காலை 6.30 மணி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.
மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 35,000 உதவித்தொகையை தங்களுக்கும் வழங்கக் கோரி சுகாதார சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
சுகாதார அமைச்சர் தனது கோரிக்கைகள் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலையும் வழங்கவில்லை என வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.