Thursday, July 17, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜப்பான் நிதியமைச்சர் - சபாநாயகர் சந்திப்பு

ஜப்பான் நிதியமைச்சர் – சபாநாயகர் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானிய நிதி அமைச்சர் சுசுகி ஷுனிச்சி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தானிகர் மிசுகோஷி ஹிடேகி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இங்கு உரையாற்றிய ஜப்பானிய நிதியமைச்சர், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால நட்புறவு காணப்படுவதாகவும், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவை வழங்குவதற்கு ஜப்பான் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இலங்கைக்கு ஜப்பான் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,எதிர்காலத்தில் ஜப்பானின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles