Tuesday, November 25, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை பாராட்டிய ஜப்பான் நிதியமைச்சர்

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை பாராட்டிய ஜப்பான் நிதியமைச்சர்

இலங்கை பொருளாதாரம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி பாராட்டியுள்ளார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுட்டெண் மற்றும் பணவீக்க சுட்டெண் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சாதகமான போக்குகளை சுட்டிக்காட்டிய ஜப்பானிய நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சரியான பொருளாதார வேலைத்திட்டத்தினால் இலங்கை அந்த முன்னேற்றத்தை அடைய முடிந்ததாக தெரிவித்தார்.

இந்த பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காட்டிய தலைமைத்துவத்திற்கு தனது மரியாதையை வெளிப்படுத்திய அமைச்சர், நாட்டின் பொருளாதார நிலைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதை நான் புரிந்துகொள்கிறேன்.

எனவே உங்கள் வலுவான தலைமையே இதற்குக் காரணம் என்று நான் நம்புகிறேன், உங்கள் தலைமையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி நேற்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles