தமிழ்நாட்டில் உள்ள சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து, அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர், குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
பணிமாறுதல் ஆணை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குறித்த நீதிமன்ற ஊழியர், நீதிபதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த நீதிபதியை மீட்டு சேலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.