Sunday, January 18, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇபோச பேருந்துகளுக்கு புதிய QR கட்டண முறை விரைவில்

இபோச பேருந்துகளுக்கு புதிய QR கட்டண முறை விரைவில்

இலங்கை போக்குவரத்து சேவை பேருந்துகளுக்கு இலத்திரனியல் அட்டை அல்லது QR குறியீட்டு முறைமை கட்டண முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

குறித்த பேருந்துகள் மூலம் நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாகவும், அதனால் பயணச்சீட்டுகளுக்கு பணம் செலுத்துவதற்கு இலத்திரனியல் அட்டை அல்லது QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர்இ இலங்கை போக்குவரத்து சபையினால் (ளுடுவுடீ) புதிய இணையத்தளத்தில் பணம் செலுத்தும் முறை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சில பஸ் சாரதிகள் அல்லது நடத்துநர்களால் அன்றைய மொத்த வருமானம் அந்தந்த டிப்போக்களுக்குத் திருப்பித் கொடுக்கப்படுவதில்லை எனவும், இதனால் ஒரு டிப்போவிற்கு ஒரு நாளைக்கு சுமார் 100,000 ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலத்திரனியல் அட்டை அல்லது QR குறியீட்டு முறைமையுடன் கூடிய பணம் செலுத்தும் முறை சுமார் இரண்டு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles