பாகிஸ்தானில் பெருமளவான குழந்தைகள் நியுமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 36 குழந்தைகள் கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடுங்குளிர் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நியுமோனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எதிர்வரும் 31ஆம் திகதி வரை பாடசாலைகளில் காலை கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளி குழந்தைகளுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.