ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனுச்சி இன்று (11) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
ஜப்பானிய நிதியமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தீவு வந்தடைந்த ஜப்பானிய நிதி அமைச்சரை வரவேற்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளார்.