Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனாவினால் வழங்கப்பட்ட பாடசாலை சீருடை தொகுதி கையளிப்பு

சீனாவினால் வழங்கப்பட்ட பாடசாலை சீருடை தொகுதி கையளிப்பு

பெப்ரவரி 19ஆம் திகதி புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சீனாவினால் வழங்கப்பட்ட முதல் தொகுதி பாடசாலை சீருடைகள் இன்று (11) கல்வி அமைச்சின் வளாகத்தில், இலங்கைக்கான சீனத் தூதுவர் Xi Shang Hong வினால் கல்வி அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

மொத்தப் பாடசாலை சீருடைத் துணித் தேவையில் 80% சீன அரசின் மானியமாகப் பெற முடிந்தது.

முந்தைய ஆண்டில் 50% மானியம் வழங்க ஒப்புக்கொண்ட சீன அரசு, இம்முறை மானியத்தை 70% ஆக உயர்த்தியது.

நேரடித் தலையீடு காரணமாக அது மேலும் 80 சதவீதமாக உயர்த்தப்பட்டது என கல்வி அமைச்சர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles