இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்தனர்.
யாழ்ப்பாணம் வருகை தந்த இளவரசி உள்ளிட்ட குழுவினரை வடமாகாண ஆளுநர் வரவேற்றார்.
தொடர்ந்து யாழ்.பொது நூலகத்திற்கு சென்ற இளவரசி உள்ளிட்ட குழுவினரை யாழ்.மாநகர சபை ஆணையாளர், நூலகர், நூலக உத்தியோகஸ்தர்கள் வரவேற்றனர்.
இதேவேளை குறித்த நிகழ்வுக்கு செய்தி சேகரிப்புக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் வலையொளி அலைவரிசை (Youtube Channel) வைத்திருபோர் உள்ளிட்ட நால்வருக்கு அனுமதி வழங்கப்பட்டது.