Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

அரச ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

அரச சேவையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை நேற்று (10) வெளியானது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, அரச அதிகாரிகளின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ஜனவரி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, அரச ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 7,800 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் 12,800 ரூபா சேர்க்கப்படும். அதன்படி கொடுப்பனவாக 17,800 ரூபா செலுத்த வேண்டும்.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை நிலுவையில் உள்ள வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2025 ஜனவரி முதல் மார்ச் வரை மாதாந்தம் 5,000 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டுமென பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles