கடந்த காலங்களில் மின் கட்டணம் செலுத்தாததால் 10 இலட்சத்து 60 ஆயிரத்து 400 பேரின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை 9 இலட்சத்து 60 ஆயிரத்து 560 பேரின் மின் இணைப்புகளை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், லெகோ நிறுவனத்தினால் 98 ஆயிரத்து 834 பேரின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும்இ எதிர்காலத்தில் மின்சார கட்டணம் கண்டிப்பாக குறைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.